தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   569


வேற்றுமை மயங்கியல்

இரண்டாவதும் ஏழாவதும் உடன் மயங்குதல்

85. கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. 

என்பது     சூத்திரம். இது,  தன்  பொருளின்  தீராது பிறிது ஒன்றன்
பொருட்கண்  செல்லும்  பொருள்  மயக்கமுந், தன் பொருளின் தீர்ந்து
பிறிது  ஒன்றன்  பொருட்கண்  செல்லும்  உருபு  மயக்கமும் என்னும்
இருவகை  மயக்கமும் உணர்த்தலின், வேற்றுமை மயங்கியல்’ என்னும்
பெயர்த்தாயிற்று. 

இச்சூத்திரம், இரணடாவதன்   பொருளும்,   அதிகாரத்தான்  நின்ற
ஏழாவதன் பொருளும் மயங்கும் மயக்கங் கூறுகின்றது. 

(இ-ள்.)   கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு - கருமச் சார்ச்சி
அல்லாத ‘அரசரைச் சார்ந்தான்,’ என வரும் சார்பு என்னும் பொருண்
மைக்கு,   கண்   என்   வேற்றுமை  உரிமையும்  உடைத்து  -ஏழாம்
வேற்றுமை உரித்தாய் வருதலுமுடைத்து, எ-று. 

(எ-டு.) ‘தூணினைச்   சார்ந்தான்’ என்றாற்போல   மெய்யுறலின்றி,
‘அரசர்கண் சார்ந்தான்,’ என வரும். 

இதனுள்      அரசரது சார்தற்கிடமாகிய அருள், ஏழாவதாகிய தன்
பொருளதனின்  நீங்காதே  பிறிதின் பொருளாகிய செப்படுபொருட்கண்
சென்றது. ‘தூணின்கண் சார்ந்தான்,’ என்பது வழக்கம் இன்று, ஆசிரியர்
மறுத்தலின், (1) 

இதுவும் அது 

86. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்
வினைநிலை யொக்கும் என்மனார் புலவர். 

இதுவும் அவ்விரண்டன் மயக்கங் கூறுகின்றது. 

(இ-ள்.) சினை நிலைக் கி
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:31:14(இந்திய நேரம்)