தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   581


ாருட்கண் நிற்றலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று. 

இவற்றுள் இறுதிக்கண்  நிற்பனவற்றின்   ஆறன் உருபு இறுதிக்கண்
நில்லாது. நின்றதேல், வினைக்குறிப்பாம் என்றுணர்க. இதற்காக அன்றே
‘ஈறுபெயர்க்காகும்  இயற்கைய’  (70)   என்று  ஓதிய அதனை மீட்டும்
ஈண்டு ‘இறுதியும்’ என்று வகுத்துக் கூறிற்று என்றுணர்க.
 

ஆறன்  உருபு  ஒழிந்தவற்றிற்கு  உதாரணம்: கடந்தான் நிலத்தை,
வந்தான்  சாத்தனொடு,  கொடுத்தான்  சாத்தற்கு, வலியன் சாத்தனின்,
இருந்தான் குன்றத்துக்கண் என வரும்.
 

இனி  இடை நிற்பன: நிலத்தைக் கடந்தான் சாத்தனொடு வந்தான்,
சாத்தற்குக்  கொடுத்தான்,  சாத்தனின்  வலியன்,  சாத்தனது  ஆடை,
குன்றத்துக்கண்  இருந்தான்  என வரும். ‘சாத்தனது ஆடை, ‘என்புழி
‘அது’  என்பது  பெயராய் நிற்கும். ‘ஆடை சாத்தனது,‘என்புழி‘ஆடை’
என்னும்   உடைமைப்பெயர்   எழுவாயாய்ச்   ‘சாத்தனது  ஆயிற்று,’
என்னும் பயனிலை யொடு முடிதலின், வினைக்குறிப்பாயிற்று. (20)
 

ஆறன் உருபிற்கு இலக்கணமும்

எல்லா உருபிற்கும் பொது இலக்கணமும்

105. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.
 

இஃது ஆறன்   உருபிற்கு   உரியதோர்   இலக்கணமும்   எல்லா
உருபிற்கும் பொது இலக்கணமும் கூறுகின்றது.
 

(இ-ள்.)   பிறிது பிறிது ஏற்றலும் - ஆறன் உருபு தன்னை ஒழிந்த
உரு   பினை   ஏற்றலும்  (பெயர்க்குப்  பிறிதாய்  நிற்றலின்,  ‘பிறிது’
என்றார்.),  உருபு  தொக  வருதலும்-இடையிலும்  இறுதியிலும்  ஆறு
உருபும்   தொக்கு   நிற்றலும்,   நெறிபட   வழங்கிய  வழி  மருங்கு
என்ப-நெறிபட  வழங்கிய  வழக்கைச் சார்ந்துவரும் என்ற சொல்லுவர்
புலவர், எ-று.
 

(எ-டு.)     சாத்தனதனை,     சாத்தனதனொடு,     சாத்தனதற்கு,
சாத்தனதனின், சாத்தன்தன்கண் என வரும்.
 

உருபு தொகுமிடத்து உருபும் பொருளும் உடன் தொகு
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:33:27(இந்திய நேரம்)