தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   595


கரமும் விளி ஏற்கும். (6) 

ஏனையுயிர் உயர்திணையில் விளி ஏலாமை

126. ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.
 

இது, வேண்டா கூறி, வேண்டியது முடிக்கின்றது. 

(இ-ள்.) ஏனை உயிரே-மேற்கூறப்பட்ட நான்கு ஈறும் அல்லா உயிர்
ஈறு, உயர்திணை மருங்கின் தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் -
உயர்திணைக்கண் விளிகொள்ளா என்று கூறுவர் புலவர், எ-று. 

இதனாற்பயன்,  கணி-கணியே! கரி-கரியே! என முற்கூறிய உயிர்கள்
பிறவாறாயும்   விளி   ஏற்கும்  என்றல்.  ‘தாம்’  என்றதனான்,  ‘மக’
(மலைபடு. 185) என்றது ‘மகவ!’ எனப் பிறிது வந்தும், ‘சான்றோர் ஈன்ற
தகாத்  தகா  மகா!  (பரிபா.  8-57) என ஆகாரமாயும், ‘ஆடூ, என்றது
‘ஆடூ! கூறாய்’, என இயல்பாயும், ‘ஆடூவே!’ எனப் பிறிது வந்தும், விளி
ஏற்றவாறு கொள்க. (7) 

இகர ஈற்று அளபெடைப்பெயர்

127. அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப.
 

இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. 

(இ-ள்.)  அளபெடை  மிகூஉம்  இகர இறுபெயர்-அளபெடை தன்
இயல்பு  மாத்திரையின்  மிக்கு நான்கு மாத்திரை பெற்று நிற்கும் இகர
ஈற்றுப்  பெயர்,  இயற்கைய  ஆகும் செயற்கைய என்ப - இ ஈயாகாது
இயல்பாய்   விளியேற்குஞ்   செயற்கையை  உடையவென்று  கூறுவர்
ஆசிரியர், எ-று. 

(எ-டு.) ‘தொழீஇஇ!’ (கலி.103: 40, 104:69) ன வரும்.  ‘தொழீஇஇஇ’
என ஐந்து எழுத்தும் இட்டெழுதுப. 

‘இகர     ஈற்றுப்பெயர்’ எனவே, நெட்டெழுத்து அளபெடுத்தன்று,
குற்றெழுத்தே  நின்று மாத்திரை பெற்றதென்று உணர்க. இது, ‘தொழில்
செய்கின்றவளே!’ என்னும் பொருள் தந்து நிற்பதொரு சொல். (8) 

முறைப்பெயர்

128. முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.
 

இஃது, எய்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:36:05(இந்திய நேரம்)