Primary tabs

புள்ளி ஈறுகள் பிறவாற்றான் விளி கொள்வன உள என்பதூஉம்,
எடுத்தோதாப் புள்ளி ஈறுகளிலும் விளி ஏற்பன உள என்பதூஉம்
உணர்த்துதலாம். ‘முறைமை சுட்டா மகன், மகள்’ என்பன, ‘படிவ
உண்டிப் பார்ப்பன மகனே!’ (குறுந். 156) ‘அகவல் மகளே! அகவல்
மகளே!’ (குறுந். 23) என ஏகாரம் பெற்று வருதலும் (அகவல் மகள்’
முறைமை சுட்டியதன்று; அகவல்-ஓசை),
‘கூந்தல்மா *கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வந்தே தேறுநீர்க் கூடலார்
(முத்தொள்ளாயிரம்)
என ‘அன்’ ஈறு ஏகாரம் பெற்று வருதலும், ‘நம்பன்! சிறிதே இடை
தந்திதுகேட்க’ (சீவக.1975) என ‘அன்’ ஈறு இயல்பாய் வருதலும்,
‘நம்பான்!’ எம் பெருமா!’ என ‘அன்’ ஈறு ஈற்று அயல் நீண்டு
வருதலும், ஆன் ஈறு ‘வாயிலோயே! வாயி லோயே!’ (புறம். 206:1) என
ஓகாரமாகி ஏகாரம் பெற்று வருதலும், ரகர ஈறு மாந்தர்! கூறீர் என
இயல்பாயும், இறைவரே! என ஏகாரம் பெற்றும் வருதலும், லகார ஈறு
கானல்! கூறாய், குரிசில்! கூறாய் என இயல்பாயும், திருமாலே!
தாழ்குழலே! என இயல்பாயும், அடிகள் - அடிகேள்! என ஈற்றயல்
அகரம் ஏகாரமாயும் வருதலும், இவையிற் பிறவாறாய் வருதலுங்
கொள்க.
இனி, எடுத்து ஓதாதனவற்றுள் ஆகார ஈறு, ‘துறந்துள்ளார்
அவரெனத் துனிகொள்ளல் எல்லா! நீ’ (கலி. 35: 8) என ‘ஏடீ’ என்றும்,
‘எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை’ (கலி. 61:7)
என ‘ஏடா’ என்றும் இருபாற்கும் பொதுவாய் விளி ஏற்றலும், ‘முன்’
ஈறு, தம்முன் - தம்முன! என ஏகாரம் பெற்றும், நம்முன் - நம்முனா!
என ஆகாரம் பெற்றும், ‘இர்’ ஈறு, பெண்டிர் - பெண்டிரோ! என
ஓகாரம் பெற்றும், ‘என்னை கேளீர்!’