Primary tabs

துவைத்தல், துவைக்கும் என்றாற்போல்வன.
தாம் தோன்றுதற்கு இடமல்லாதன, மரம், மான் என்றாற்போல்வன
வாகிய பெயரும்,
உண், தின் என்றாற் போல்வனவாகிய முதனிலைத்
தொழிற்பெயர் தாமே நிற்பனவுமென்று உணர்க. (5)
பெயர்ச்சொற்கள்
162.
அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே
இது, நிறுத்தமுறையானே பெயர்ச்சொற்குப்
பெயரும் முறையுந்
தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்.)
அவற்றுள்-மேற்கூறப்பட்ட நான்கு சொல்லுள்ளும், பெயர்
எனப்படுபவை தெரியும் காலை-பெயர்ச்சொல் என்று
சொல்லப்படுவனவற்றை ஆராயுங் காலை, தோன்றல், ஆறே - அவை
தோன்றும் நெறிக்கண், உயர்திணைக்கு உரிமையும் - உயர்திணைக்கு
உரிமையுடைமையும், அஃறிணைக்கு உரிமையும் - அஃறிணைக்கு
உரிமையுடைமையும், ஆயிருதிணைக்கும் ஓர் அன்ன உரிமையும் -
அவ்விருதிணைக்கும் ஒத்த உரிமை உடைமையும், அம்மூவுருபின -
அம்மூன்று வேறுபாட்டை உடையவாம், எ-று.
‘ஓரன்ன உரிமைய’ என்றதற்கு ஒரு சொல் சொல்லுதற்கண்ணே
இரண்டனையும் உணர்த்தாவென்று உணர்க. (6)
பெயர்க்கண்ணதோர் இலக்கணம்
163.
இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான.
இதுவும் பெயர்க்கண்ணதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
பெயர்வயினான-ஒருபாற் பெயரிடத்து முடிபாகவந்த
வினைகள், இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் -
இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற்பொருட்கும், உரியவை
உரிய-தனித்தனிக் கூறாமல் தாமே சென்று உணர்த்தற்கு உரியன
உரியவாம், எ-று.
உம்மையான், ‘ஐம்பாலையுஞ் சேர
உணர்த்தாது சில பாலை
உணர்த்துதற்கு உரியன உ