தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   614


லறி வந்த உயர்திணைப் பெயரே. 

இது, முறையானே உயர்திணைப் பெயரை உணர்த்துகின்றது.  

(இ-ள்.)     அவ்வழி-மூன்று கூற்றாக முற்கூறிய பெயருள், அவன்
இவன்  உவன்  என  வரூஉம்  பெயரும்  அவள்  இவள் உவள் என
வரூஉம் பெயரும் அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும் - அவன்
என்பது  முதலாகிய  சுட்டுப்பெயர்  ஒன்பதும்,  யான் யாம் நாம் என
வரூஉம்  பெயரும்  -  யான் என்னுந் தனித்தன்மைப் பெயர் ஒன்றும்
யாம்  என்னும்  படர்க்கையுளப்  பாட்டுத்  தன்மைப் பெயர் ஒன்றும்
‘நாம்’  என்னும் முன்னிலை உளப் பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும்,
யாவன்    யாவள்    யாவர்    என்னும்    ஆவயின்    மூன்றோடு
அப்பதினைந்தும்-‘யாவன்’   முதலிய  வினாப்பொருளிடத்துப்  பெயர்
மூன்றுமாயுள்ள   அப்பதினைந்து  பெயரும்,  பால்  அறிவந்த  உயர்
திணைப்பெயரே- ஒருவன், ஒருத்தி பலர் என்னும் மூன்று பாலினையும்
அறியவந்த உயர்திணைப் பெயராம், எ-று. 

‘யான்,  யாம், நாம்’ என்பன இருபாற்கும் பொதுவேனும், குறிப்பான்
உணர்ந்துழி  ஒரு  பால்  உணர்த்தியே  நிற்றலின்,  பால் அறிய வந்த
உணர்திணைப் பெயராயின. 

‘நம்பி, பெண்டாட்டி’ என இகர ஈறும், ‘ஆடூஉ, மகடூஉ’ என ஊகார
ஈறு, பிற ஈறுகளும் இருபாற்கும் உரியவாய் வருதலின், ஈறுபற்றி ஓதாது
இச்சூத்திரம் முதலாகப் பெயர்பற்றி ஓதினார். (8) 

உயர்திணைப் பெயர்கள்

165. ஆண்மை அடுத்த மகனென் கிளவியும்
பெண்மை அடுத்த மகளென் கிளவியும்
பெண்மை அடுத்த இகர இறுதியும்
நம்மூர்ந்து வரூஉம் இகரவை காரமும்
முறைமை சுட்டா மகனு மகளும்
மாந்தர் மக்க ளென்னும் பெயரும்
ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியுஞ்
சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் 

அவை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:39:39(இந்திய நேரம்)