Primary tabs

மை அடுத்து நாணு வரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தான்
பால் திரிந்த பெண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும், அன்ன இயல
என்மனார் புலவர் - இவை மூன்றும் அவை போலப் பால் அறிய
வந்த உயர்திணைப் பெயராம், எ-று.
‘பெண்மகன்’ என்பது, அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே
வழங்கினாராயிற்று, இங்ஙனங் கூறலின். (10)
இதுவும் அது
167. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே.
இதுவும் அது.
(இ-ள்.)
நிலப்பெயர் - ஒருவன் தான் பிறந்த நிலத்தினான் பெற்ற
பெயர்களும், குடிப்பெயர் - ஒருவன் தான் பிறந்த குடியினான் பெற்ற
பெயர்களும், குழுவின் பெயரே-தாம் திரண்டு ஒரு துறைக்கண் உரிமை
பூண்ட பல்லோர் மேல் எக்காலத்தும் நிகழும் பெயர்களும்,
வினைப்பெயர் - தாம் செய்யும் தொழிலினான் பெற்ற பெயர்களும்,
உடைப்பெயர்-தம் உடைமையான் பெற்ற பெயர்களும், பண்புகொள்
பெயரே - தமது பண்பினான் பெற்ற பெயர்களும், பல்லோர்க் குறித்த
முறை நிலைப் பெயரே - பல்லோரைக் கருதின தமது முறைமையான்
பெற்ற பெயர்களும், பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே -
பல்லோரைக் கருதின சினை நிலைமையான் பெற்ற பெயர்களும்,
பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே- பல்லோரைக் கருதின
குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலைமையான் பெற்ற பெயர்