Primary tabs

அணிகொள
நுண்கோ லெல்வளை தெளிர்க்கும் முன்கை
மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்
மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட் டாகுந்
துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு
அரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ
வெள்ளரா மிளிர வாங்கும்
பிள்ளை யெண்கின் மலைவயி னானே’’
(அகம்.257)
இது கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் தலைவி நடையை
வியந்தது. இஃது அகம். ‘‘அழிவிலர்
முயலும்’’ (நற்.9) என்பது
பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது.
இனித் தலைவி
பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின்
‘இரங்கினு’மெனச் சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப் பொருட் கண்
இரங்கற் பொருள் நிகழுமென்றார்.
உ-ம்:
‘‘ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை
யறுகோட் டுழைமான் ஆண்குர லோர்க்கும்
நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே பலபுலந்
துண்ணா வுயக்கமோ டுயிர்செலச் சாஅய்த்
தோளுந் தொல்கவின் றொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
மருந்துபிறி தின்மையின் இருந்தும்வினை யிலனே’’
(அகம்.147)
இதனுள் வெள்ளிவீதியைப்
போலச் செல்லத் துணிந்த யான்
பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்த
பெயர்வுக்குத் தோணலந் தொலைய உயிர்செலச் சாஅய் இரங்கிப்
பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு
மெய்ப்பாடுபற்றியுணர்க. இஃதும் அகம்.
‘‘வானமூர்ந்த’’ (11) என்னும் அகப்பாட்டினுள் (அகம்.11)
‘‘மெய்புகு வன்ன கைகவர் முயக்க
மவரும் பெறுகுவர் மன்னே’’
எனக் கூறி,
அழுதன் மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென
இரக்கம்மீக் மீக்கூறியவாறு முணர்க.
‘‘குன்றியன்ன’’ (133) என்னும்
அகப்பாட்டும் (133)
அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன.
இங்ஙனம் இச்சூத்திரவிதி
உண்மையிற் சான்றோர் அகத்தினுங்
கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த
செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க.
இல்லிருந்து செந்தீயோம்பல்