தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2302


தெய்துவித்தது.

(இ-ள்)  ஆடூஉத்  திணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய
திணைதொறும்  மரீஇய  பெயர்களுள்;  ஆயர்  வேட்டுவர்  வரூஉங்
கிழவரும்  உளர் - ஆயரினும் வேட்டுவரினும் வருங் கிழவரும் உளர்,
ஆவயின்   (வரூஉங்   கிழவியரும்  உளர்)  -  அவ்விடத்து  வருந்
தலைவியரும் உளர் எ-று.

ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்தோதினாரேனும்
ஒன்றென  முடித்தலான்  அந்நிலங்கட்கு உரிய ஏனைப் பெயர்களான்
வருவனவுங் கொள்க.

‘‘தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந்
தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப் பாங்கரு
முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம்
புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா
மொருங்கு விளையாட வவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன் மற்றென்னை
முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ
பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய்
தாதுசூழ் கூந்த றகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ
யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப்
பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா
யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற்
றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர்
செய்புற நோக்கி யிருத்துமோ நீ பெரிது
மையலை மாதோ விடுகென்றேன் றையலாய்
சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப
வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ
யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும்
யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற
நோயுங் களைகுவை மன்.’’                  (கலி.111)

‘‘ஆயர் மகனையுங் காதலை கைம்மிக
ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ
நீயுற்ற நோய்க்கு மருந்து.’’                 (கலி.107)

‘‘தோழிநாங்
காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர
நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்
கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம்
புல்லினத் தாயர் மகன்.’’                   (கலி.115)

என்றாற் போல்வன பிறவும் வருவன கொள்க.

இன்னும்   ‘‘ஏனலு  மிறங்குகதி  ரிறுத்தன’’   (132)   என்னும்
அகப்பாட்டினுள்   ‘‘வானிணப்  புகவிற்  கானவர்  தங்கை’’  எனவும்,
‘‘மெய்யிற்றீரா’’   (28)    என்பதனுள்   ‘‘வேட்டுவற்   பெறலோ
டமைந்தனை’’
எனவும் வருவனவும் பிறவுங் கொள்க. வேட்டு என்னுந்
தொழிலுடையானை வேட்டுவனென்றலிங் குறிப்பு வினைப்பெயர்.

‘‘குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
வளையண் முளைவா ளெயிற்ற
ளிளை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:57:45(இந்திய நேரம்)