Primary tabs

கொடுங்கான் முன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே’’
(அகம்.35)
இவ்வகம் தலைவன்
மிகவும் அன்புசெய்கவென்று தெய்வத்திற்குப்
பராஅயது.
‘‘நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை
யியம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தஞ்
சென்றனண் மன்றவென் மகளே
பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே’’
(ஐங்குறு.377)
இவ் வைங்குறுநூறு யாம் இவற்றைக்கண்டு
வருத்த இவற்றை
எமக்கு ஒழித்துத் தான் நீரிலா ஆரிடைப் போயினா ளென்றது.
‘‘என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ
டழுங்கன் மூதூ ரலரெழச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே’’
(ஐங்குறு.372)
இஃது என்னை நினைப்பாளோவென்றது.
இன்னும் இதனானே, செய்யுள்களுள்
இவற்றின் வேறுபட
வருவனவெல்லாம் அமைத்துக் கொள்க.
‘‘செல்லிய முயலிற் பாஅய சிறகர்
வாவ லுகக்கு மாலையாம் புலம்பப்
போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
துணையிலள் கலுழு நெஞ்சின்
இணையே ருண்க ணிவட்குநோ வதுவே’’
(ஐங்குறு.378)
இது தோழி தேஎத்துப் புலம்பல். இஃது
ஐங்குறுநூறு. தோழி
தேஎத்து மெனப் பொதுப்படக் கூறியவதனான் தோழியை வெகுண்டு
கூறுவனவுங் கொள்க.
‘‘வரியணி பந்தும் வாடிய வயலையு
மயிலடி யன்ன மாக்குர னொச்சியுங்
கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத்
தமியே கண்டதண் டலையுந் தெறுவர
நோயா கின்றே மகளை நின்றோழி
யெரிசினந் தணிந்த இலையி லஞ்சினை
வரிப்புறப் புறவின் புலம்புகொ டெள்விளி
யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி
யிலங்கிலை வெள்வேல் விடலையை
விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே’’
(நற்.305)
என வரும்.
‘‘இதுவென் பாவைக் கினியநன் பாவை
யிதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
யிதுவென் பூவைக் கினியசொற் பூவையென்
றலம்வரு நோக்கி னலம் வருஞ் சுடர்நுதல்
காண்டொறுங் காண்டொறுங் கலங்க
நீங்கின ளோவென் பூங்க ணோளே’’
(ஐங்குறு.375)
இவ் வைங்குறுநூறு தேடிக் காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது.
இனி அவ்வழியாகிய கிளவிகளுட்சில வருமாறு:-
‘‘ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள்
இனியே,
தாங்குநி னவல மென்றனி ரது