Primary tabs

கண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம்.
அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க.
உ-ம்:
‘‘கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே’’
(ஐங்குறு.358)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டானென்றது.
‘‘பாடின்றிப்
பசந்தகண்’’ (பாலைக்கலி.16) என்பதும் அது.
‘‘வளைபடு முத்தம் பரதவர் பகருங்
கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்
கெடலரும் துயர நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே’’
(ஐங்குறு.195)
இவ் வைங்குறுநூறு
வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு
வருந்திக் கூறியது.
‘‘புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி
னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க
ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ்
செல்ல றீர்க்கஞ் செல்வா மென்னுஞ்
செய்வினை முடியா தெவ்வஞ் செய்த
லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென
வுறுதி தூக்கத் தூங்கி யறிவே
சிறிதுநனி விரைய லென்னு மாயிடை
யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்லென் வருந்தி உடம்பே’’
(நற்.284)
இந் நற்றிணையும் அது.
‘‘கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலிநின்
அணிமாண் சிறுபுறங் காண்டுஞ் சிறுநனி
ஏகென ஏகல் நாணி ஒய்யென
மாகொள் நோக்கமொடு மடங்கொளச் சாஅய்
நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு
யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை
அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி
களிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டு
வில்லோர் குறும்பிற் றதும்பும்
வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே’’
(அகம்.261)
இது மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது.
‘‘திருந்திழை யரிவை நின்னல முள்ளி
யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரு
நெறிவிலங் கதர கானத் தானே’’
(ஐங்குறு.355)
இவ் வைங்குறுநூறு பெற்ற