Primary tabs

யெழின் மானோக்கிற்
காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற்
கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரை நுசுப்பினாய்
நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை
யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்!
உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக
விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங்
களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம்
வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய்
மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு
மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம்
உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
அல்லல்கூர்ந் தழிபுக வணங்காகி யடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு
மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்;
எனவாங்கு,
ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய்
மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி
நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே’’
(கலி.58)
எனத் தான் உயிர்கொடுத்தானாகத் தனது
நன்மைகூறி அவளது
தீங்கெல்லாங் கூறுவான், மடலேறவேன்போலு மென்று ஐயுற்றுக்
கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கின்பமாதலிற்
‘சொல்லி யின்புற’லென்றார். இது புல்லித்
தோன்றும்
கைக்கிளையெனவே காமஞ் சான்ற இளமையோள்கண் நிகழுங்
கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று.
அஃது ‘‘எல்லாவிஃதொத்தன்’’ (61) என்னுங் குறிஞ்சிக் கலியுள்,
‘‘இவடந்தை,
காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாதுநீ வேண்டியது;
பேதாஅய்,
பொருள் வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ
மருளி மடநோக்கி னின்றோழி யென்னை
யருளீயல் வேண்டுவல் யான்’’
(கலி.61)
எனவரும்.
இது கைகோளிரண்டினுங்
கூறத்தகாத வாய்பாட்டாற் கூறலிற்
கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற் சொல்லியின்புறினுந்
தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகா
தென்பதூஉம், அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க் காயின் அது
புலனாமென்பதுஉங்
கொள்க. அது ‘‘கிழவோள் பிறள்குணம்’’
(தொல். பொ. பொரு. 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுப.
‘காமஞ் சாலா