Primary tabs

பேதுபெரி துறலே’’ (அகம்.236)
எனவும்,
‘‘வெள்ளி வீதியைப்போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே’’
(அகம்.147)
எனவும், அகத்திணைக்கட்
சார்த்துவகையான் வந்தன அன்றித்
தலைமைவகையாக வந்தில என்பது.
வருகின்ற
(55) சூத்திரத்துப் ‘பொருந்தின்’ என்னும் இலேசானே
இச் சார்த்துவகை கோடும். இது பெயரெனப் பட்ட கருப்பொருளாதலிற்
கூற்றிற்கு உரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும்
பொதுப்பெயரா னன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறாரென்று
கொள்க.
உ-ம்:
‘‘முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே
யரவெயிற் றொடுக்கமொ டஞ்சுதக் கனவே
களவறி வாரா வாயினுங் கண்ணே
நுழைநுதி வேலி னோக்கரி யவ்வே
யிளைய ளாயினு மணங்குதக் கிவளே
முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே
யதனா னோயில ளாகுக தில்ல
சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே’’
இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை.
‘‘ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய விராம னவனொடு
மிதிலை மூதூ ரெய்திய ஞான்றை
மதியுடம் பட்ட மடக்கட் சீதை
கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித்
துயிலெழுந்து மயங்கின ளதாஅன்று மயிலென
மகிழ்....................’’
இது சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளை.
இஃது ஆசுரமாகலின்,
முன்னைய மூன்றுங் கைக்கிளை
யென்றதனாற் கோடும். ‘‘யாமத்து
மெல்லையும்’’ (நெய்தற்கலி.22)
என்றது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாப் பெருந்திணை.
‘‘பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
தாரழ லாற்றா தைஇ யோகியிற்
பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
முத்தினு முழங்கழற் செந்தீப்
பொத்துவது போலும் புலம்புமுந் துறத்தே.’’
இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை.
இவை சான்றோர் செய்யுளுட் பெருவரவிற்றன்மையினன்றே
முற்சூத்திரத்து முன்னும் பின்னும் இவற்றை வைத்த தென்பது.
‘‘முட்காற் காரை முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட் டார
நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கன