Primary tabs

உணராமற் பிற்றை ஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர்
ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்;
உ-ம்:
‘‘பிறர்புல மென்னார் தமர்புல மென்னார்
விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப்
படாஅ முகம்படுத் தாங்கு’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1240.நிரைகோடல்.9)
‘‘கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை
யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்-தங்கிளைக்கண்
மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும்
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.’’
(புறத்திரட்டு.1246)
இவை கண்டோர் கூற்று.
புடைகெட
ஒற்றின் ஆசிய வேயே - நுரைகோடற்கு எழுந்தோர்
பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று
வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரைமீட்டற்கு
எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச்
சொல்லும்;
உ-ம்:
‘‘ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங்
கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர
வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.’’
‘‘நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது
மனக்குரிய காதல் வயவேந்த னென்று
நினக்குரிய வாக நிரை.’’
இவை கண்டோர் கூற்று.
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை - நிரைகோடற்கு
எழுந்தோர் வேயுரைத் தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புகள்
முடிந்தபின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப்
பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று
விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்;
உ-ம்:
‘‘கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்