தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2366


‘‘இரவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த
வெட்சி மறவர் வீழவு முட்காது
கயிறியல் பாவை போல வயிறிரித்
துழைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல
முற்படு பூசல் கேட்டனர் பிற்பட
நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி
நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண்
மாக்கட னெருப்புப் போல நோக்குபு
வெஞ்சிலை விடலை வீழ்ந்தன
னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே.’’

இது கண்டோர் கூற்று.

வெட்சிமறவர்   வீழ்ந்தமை கேட்டு விடாது  பின்வந்தோன்  பாடு
கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.

நோய்    இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம் நின்று
நின்று  சிலர்  பூசன்மாற்றத்  தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக்
கொண்டு  போதலும்,  மீட்டோரும்  அங்ஙனம்  நின்று  நின்று சிலர்
பூசன்மாற்றத்    தாம்   மீட்ட   நிரையினை   இன்புறுத்திக்கொண்டு
போதலும்;

உ-ம்:

‘‘புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’           (புற. வெ. வெட்சி.11)

‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’
 (பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6)

இவை கண்டோர் கூற்று.

நுவலுழித்     தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான   நிரைகொண்டோர்  வரவும்,   ஊரிலுள்ளோர்   கண்டு
மகிழந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்;

உ-ம்:

‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு.’’   (புறம். வெ. வெட்சி.12)

‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’

(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7)

இது கண்டோர் கூற்று.

தந்து     நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம்
மூர்ப்புறத்துத்    தந்து    நிறுத்தலும்,   நிரைமீட்டோர்தாம்   மீட்ட
நிரையினைத் தந்து நிறுத்தலும்;

உ-ம்:

‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’

‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்று
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:09:43(இந்திய நேரம்)