Primary tabs

மாவரும் புகழ் ஏந்தும் பெருந்தானையர் - மாமுதலியன வற்றான்
தமக்கு வரும்
புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்;
உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டிப்போந்தை வேம்பே ஆர்
என
மலைந்த பூவும் - அப்புகழ்தான்
உறும்பகையிடத்து இன்ன
வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப்
போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்;
இதன்
கருத்து, ஏழகத்தகரும் யானையும் நாயும் கோழியும் பூழும்
வட்டும் வல்லுஞ்
சொல்லும் முதலியவற்றான் தமக்கு வரும் வெற்றிப்
புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற்
படைத்தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன்
படையாளர் வென்றாரென்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர்
என்பதூஉம். அக்கூத்தும் வேத்தியற்
கூத்தின் வழிஇயின கருங்கூத்
தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம்
உணர்த்தியதாம்.
இதனை இங்ஙனந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின்
அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம்.
ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை
வைத்தது இக்கருத்தானேயென்றுணர்க.
உ-ம்:
‘‘ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான்
வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந்
தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து.’’
இது போந்தை மலைந்தாடியது.
‘‘குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத
லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன்
குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு
தலைமலையற் பாலதூஉ மன்று.’’
இது வேம்பு தலைமலைந்தாடியது.
‘‘ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர்
போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால்
பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று
சிறைகெழு வாரணப்போர் செய்து’’
இஃது ஆர்மலைந்தாடியது.
இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க.
வாடா வள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்;
அஃது இழிந்தோர் காணுங் கூத்து.
உ-ம்:
‘‘மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமக ணோற்றாள் பெரிது’’
இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப்