தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2390


னருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த செழுந்செந் நெல்லி
னம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தேற் றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின்
உலந்தனர் பெருமிநின் னுடற்றி யோரே
யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்புசுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி
லாரெயிற் றோட்டி வௌவினை யேற்றொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையோ டருங்கலந் தரா அர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
யறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே’’       (பதிற்றுப்.71)

என வரும்.

‘‘இருங்கண் யானையோ டருங்கலந் தெறுத்துப்
பணிந்துகுறை மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே.’’         (பதிற்றுப்.)

இதுவும் அது.

இவை பதிற்றுப்பத்து.

தோற்றோர் தேய்வும் - அங்ஙனந்  திறைகொடுத்தோரது குறைபாடு
கூறுதலும்;

உ-ம்:

‘‘வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை
மாமலையிற் கணங்கொண்டவ
ரெடுத்தெறிந்த விறன்முரசங்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடிர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா
ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென
வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
வனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசை
தொலையாக் கற்பநின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:14:15(இந்திய நேரம்)