தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3169


ணத்துட் காண்க.

நிலப்பகுப்பு ஆவன
 

5.
மாயோன் மேய காடுறை உலகமுஞ்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
 

இது  ‘நடுவணது’ (2) ஒழிந்த நான்கானும்  அவ்  ‘வைய’  த்தைப்
பகுக்கின்றது.

(இ-ள்) மாயோன் மேய காடு உறை உலகமும்,சேயோன் மேய மை
வரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய
பெரு   மணல்  உலகமும்  -  கடல்  வண்ணன்  காதலித்த காடுறை
யுலகமுஞ்,    செங்கேழ்    முருகன்    காதலித்த   வான்  தங்கிய
வரைசூழுலகமும்,  இந்திரன்  காதலித்த  தண்புன னாடுங், கருங்கடற்
கடவுள்  காதலித்த  நெடுங் கோட்டெக்கர் நிலனும்; முல்லை குறிஞ்சி
மருதம்  நெய்தல்  என  சொல்லிய முறையான் சொல்லவும் படுமே -
முல்லை  குறிஞ்சி மருதம் நெய்த லென ஒழுக்கங் கூறிய முறையானே
சொல்லவும்படும் எ-று.

இந்நான்கு     பெயரும் எண்ணும்மையொடு நின்று எழுவாயாகிச்
சொல்லவும்படும்  என்னும்  தொழிற்பயனிலை  கொண்டன.  என்றது,
இவ்வொழுக்க   நான்கானும்  அந்நான்கு   நிலத்தையும்   நிரனிறை
வகையாற்  பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு
நிலம் இடமாயிற்று.

உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படுமெ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:40:34(இந்திய நேரம்)