தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3171


மூடலுமுணர்தலும்’’ உள்ளிட்ட  இன்ப  விளையாட்டு  இனிதினுகரும்
இமையோர்க்கும்   இன்குரலெழிலிக்கும்   இறைவனாகிய  இந்திரனை
ஆண்டையோர்   விழவுசெய்து  அழைத்தலின்,  அவன்  வெளிப்படு
மென்றார்.

அது,

‘‘வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு’’
             (கலி.98)

என,  இந்திரனைத்  தெய்வமென்றதனானும்,  இந்திர விழவூ ரெடுத்த
காதையானும் உணர்க.

இனி     நெய்தனிலத்தில்   நுளையர்க்கு  வலைவளங்  தப்பின்
அம்மகளிர்  கிளையுடன்  குழீஇச்  சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன்
கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை,

‘‘சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்’’
(பத்து. பட்டின.86.7)

எனவும்,

‘‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி’’    (அகம்.110)

எனவும்,

‘‘அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமொ டயரும்’’
                  (அகம்.240)

எனவும் வரும்.

இனிப் பாலைக்குச்

‘‘சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’’
   (கலி.16)

எனவும்,

‘‘வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ’’   (கலி.16)

எனவும்      ஞாயிற்றைத்    தெய்வமாக்கி   அவனிற்   றோன்றிய
மழையினை  யுங்  காற்றினையும்  அத்தெய்வப்  பகுதியாக்கிக் கூறுப
வாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:40:57(இந்திய நேரம்)