Primary tabs

தெவன்கொ லன்னாய்’’ (ஐங்குறு.30)
இது தோழி அறத்தொடு நின்றது.
‘‘பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தைகை வேலே.’’
(ஐங்குறு.60)
இது தோழி இரவுக்குறி மறுத்தது.
‘‘நெறிமருப் பெருமை நீலஇரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.’’
(ஐங்குறு.91)
இஃது இளையள் விளைவில ளென்றது.
‘‘கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்மூர் வருது
மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே’’
(ஐங்குறு.92)
இது நின் தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்தில
ரென்று
தோழி கூறக் கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது.
இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.
இக்
காட்டியவெல்லாம் ஐங்குறுநூறு. ‘‘புனையிழை நோக்கியும்’’
என்னும் மருதக் கலியும் (கலி.76) அது.
‘‘முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்
மூதா தின்றல் அஞ்சிக் காவலர்
பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
காஞ்சியி னகத்தக் கரும்பருத்தி யாக்குந்
தீம்புன லூர திறவ தாகக்
குவளை யுண்க ணிவளும் யானுங்
கழுநீ ராம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத் தலைப்பப்
பொய்த லாடிப் பொலிகென வந்து
நின்னகாப் பிழைத்த தவறோ பெரும
கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்