Primary tabs

உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின்.
(இ-ள்)
புணர்தலும் புணர்தனிமித்தமும்;பிரிதலும் பிரிதனிமித்தமும்;
இருத்தலும் இருத்தனிமித்தமும் இரங்கலும் இரங்கனிமித்தமும்,
ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்கால்
ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் எ-று.
‘தேருங்காலை’என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப்
பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு
ஊடலும் அவ்வந்நிமித்தங்களும் உரியவென்று ஆராய்ந்துணர்க.
இக்கருத்தே பற்றி ‘மாயோன் மேய’ (5)
என்பதனுள்
விரித்துரைத்தவாறுணர்க.
அகப்பொருளாவது
புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப
நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறிப்,
புணர்ந்துழி யல்லது
பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி
பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மையானும் பிரிவினை அதன்பிற்
கூறிப், பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லை யாகலின்
இருத்தலை அதன்பின் கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனேவலிற்
சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதே
யாதலின் அவ் விரங்கற்பொருளை அதன்பிற் கூறி, இந்நான்கு
பொருட்கும் பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறத்த லானும் ஊடலை
அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார்.
நான்கு
நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் முற்பட்ட புணர்ச்சியே
புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற்கூறினார்.
அவை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற்கூட்டமுந்
தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண்
எதிர்ப்பாடும் போல்