Primary tabs

ங்காது வதிந்தநங் காதலி
யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே’’
(அகம்.19)
இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று.
‘‘அறியாய் வாழி தோழி யிருளற
விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும்
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்
அருளே காதல ரென்றி நீயே’’
(அகம்.53)
இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
‘‘வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’’
(குறுந்.21)
இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றியிருந்தது.
‘‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னி
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே’’
(குறுந்.221)
இது பருவங்கண்டாற்றாது கூறியது. இது முல்லைசான்ற கற்பா யிற்று,
அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.
‘‘மடவ மன்ற தட