தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3242


மெல்லியல் மடந்தை
அரிய சேய பெருங்க லாறே.’’          
(சிற்றெட்டகம்)

இதனுட்      கதிரும்    ஊழ்த்தனனெனவே    பொழுதுசேறலும்,
பெருங்கலாறெனவே  ஆற்றதருமையும்  பற்றிக்  குற்றங் காட்டியவாறு
காண்க. ‘‘எல்லுமெல்லின்று’’ என்னுங் குறுந்தொகைப் (390) பாட்டும்
அது.

‘‘நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்
பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தனன்
அணித்தாத் தோன்றுவ தெம்மூர்
மணித்தார் மார்ப சேந்தனை சென்மே.’’  
(பொருளியல்)

இஃது     எம்மூர்   அணித்தென்றதனாற்  சார்வும்,  அதனானே
செல்லுந்தேயஞ்  சேய்த்தெனவுங் கூறிற்று. மகட்பயந்த வாழ்வோர்க்கு
இவளைக் கண்டு அருள் வருதலின் ‘ஆர்வநெஞ்ச’ மென்றார்.

‘‘இதுநும் மூரே யாவருங் கேளிர்
பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும்
மீன்றோ ரெய்தாச் செய்தவம்
யாம்பெற் றனமால் மீண்டனை சென்மே.’’

இஃது  அழிந்தெதிர்  கூறி  விடுத்தது. இது  ‘கொடுப்போரின்றிக்
கரண  முண்மை’ (141) கூறிற்று. மீட்டுழி இன்னுழிச் சென்று இன்னது
செய்ப என்றல் புலனெறி வழக்கன்று.

‘‘பெயர்ந்து போகுதி பெரூமூ தாட்டி
சிலம்புகெழு சீறடி சிவப்ப
விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.’’

‘‘சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே.’’    
(கலி.9)

‘‘கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணை
மடன்மேய வாழ்குர லன்றில் - கெடலருஞ்சீர்
வாமா னெடுங்கோதை வான்றீண்டு கொல்லிமேற்
றேமாவின் மேய கனி.’’

இவை செவிலியைத் தடுத்தன.

‘‘சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும் பல்வளையு மொருபாற்
                                        றோன்ற
அலங்கலந் திண்டோளும் ஆடெருத்தும் ஒண்குழையு
                              மொருபாற் றோன்ற
விலங்க லருஞ்சுரத்து வேறுருவின் ஓருடம்பாய் வருவார்க்
                                           கண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:54:23(இந்திய நேரம்)