தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3246


பெயர்த்தல்     வேண்டுதலிற்  றலைவி  மிகவருந்தித்  தமர்பாற்பட்டு
உரையாடாது  தலைவன் பாற்படுதலின், அவள் கற்பொடு புணர்ந்தமை
சுற்றத்தாரும்   சுரத்திடைக்   கண்டோரும்   உணர்ந்த  வெளிப்பாடு
உளப்படக்     கொண்டு     தலைக்கழிதற்    கூற்றின்    கண்பட்ட
பகுதிக்கண்ணும்;

கடைக்கொண் டெய்தியென்க.  கடை - பின்  தமரெனவே தந்தை
தன்னையரை  உணர்த்திற்று.   ‘‘முன்னர்த்   தாய்நிலை   கண்டு
தடுப்பினு’’
(40) மென்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத்தாற்றமர்
உணர்ந்து,   வலிதிற்கொண்டு  அகன்றானோ   வென்று   கருதியும்
அவ்வரைவு  மாட்சிமைப்படுத்தற்கும்  பின்சென்று அவள் பெயராமற்
கற்பொடு    புணர்ந்தமை    கண்டு,   தலைவன்  எடுத்துக்கொண்ட
வினைமுடித்தலும்   ஒருதலை   யென்றுணர்ந்து,  பின்னர்  அவரும்
போக்குடன்பட்டு மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற்
கற்பென்றார்.   ‘உளப்பட’  வென்றதனான்  வலித்தலும்  விடுத்தலும்
அகப்பட வென்றாராயிற்று.

நாளது  சின்மையும்  இளமையது  அருமையும் தாளாண் பக்கமும்
தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது  உயர்ச்சியும்
அன்பினது    அகலமும்    அகற்சியது    அருமையும்    ஒன்றாப்
பொருள்வயின்   ஊக்கிய   பாலினும்  -  வாழ்க்கைநாள்  சிலவாதல்
ஏதுவாகப்   பொருள்   செய்தல்  குறித்தாரை  இளமையது  அருமை
இன்பத்தின்கண்ணே  ஈர்த்து  ஒன்றாமையும்,  மடியின்மை  ஏதுவாகப்
பொருள்செயல் குறித்தா
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:55:09(இந்திய நேரம்)