Primary tabs

ம் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுய ரரண்பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே’’ (ஐங்குறு.443)
இது
வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன்தான் குறித்த பருவத்து வினை
முடியாமையிற் புலம்பியது.
‘‘தழங்குகுரன் முரசங் காலை யியம்பக்
கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே
மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே
யஞ்சி லோதியை யுள்ளுதொறுந்
துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே.’’
(ஐங்குறு.448)
இது
வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப் பெறாது
அரசன்
செய்தியும் பருவத்தின் செய்தியுந் தன்செய்தியுங் கூறிப்
புலம்பியது.
இப் பாசறைப் புலம்பல் பத்தனுள்ளும் வேறுபாடு காண்க.
தூதிற் பிரிந்துழிப் புலம்பியன வந்துழிக் காண்க.
‘‘நீடின மென்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்
தியாம்வெங் காதலி னோய்மிகச் சாஅய்ச்
சொல்லிய துரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே’’
(ஐங்குறு.478)
இது தூதுகண்டு அவள் கூறிய திறங்கூறெனக் கேட்டது.
‘‘பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள்
கையறு நெஞ்சத் துயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயிற்
காண்குவை மன்னாற் பாணவெந் தேரே’’
(ஐங்குறு.477)
இது தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைவன்
கூறியது.
‘‘படந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்கன் மேலுங்
கொடுந்தடங்கட் கூற்றமின் னாக - நெடுந்தடங்க
ணீர்நின்ற நோக்கி னெடும்பணைமென் றோளாட்குத்
தேர்நின்ற தென்னாய்நீ சென்று’’
(திணைமாலை115)
இஃது இளையோரைத் தூது விட்டது.
‘‘ஐய வாயின செய்யோள் கிளவி
கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென
நோய்நன்கு செய்தன வெமக்கே