தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3287


யஞ்     சிறந்த தென்ப' (தொல். பொ. கள.3) என்னும் சூத்திரத்திற்
கூறுதும்.   இவையும்   புணர்ச்சி   நிமித்தமாய்க்  குறிஞ்சியாகாவோ
வெனின்,  காட்சிப்பின்  தோன்றிய  ஐயமும் ஆராய்ச்சியுந்  துணிவும்
நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின், இவை
ஒருதலையாக    நிமித்தமாகா;   வழிநிலைக்   காட்சியே   நிமித்தமா
மென்றுணர்க.                                           (52)

புலனெறி வழக்கம் கலிப்பாவின்கண்ணும்
பரிபாடற்கண்ணும் நடத்தற்கு உரித்தாதல்
 

53.
நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினும்
உரியதாகு மென்மனார் புலவர்.
 

இது      புலனெறி    வழக்கம்    இன்னதென்பதூஉம்,   அது
நடுவணைந்திணைக்கு  உரிமையுடைத்தென்பதூஉம், இன்ன செய்யுட்கு
உரித்தென்பதூஉம் உணர்த்துத னுதலிற்று.

(இ-ள்.)     நாடகவழக்கினும்       உலகியல்      வழக்கினும்
-புனைந்துரைவகையானும்,    உலகவழக்கத்தானும்;   பாடல்   சான்ற
புலனெறி  வழக்கம்.  புலவராற்  பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்;
கலியே  பரிபாட்டு  அஇரு  பாங்கினும்  உரியது  ஆகும் என்மனார்
புலவர்.    கலியும்    பரிபாடலுமென்கின்ற   அவ்விரண்டு   கூற்றுச்
செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் எ-று.

இவற்றிற்கு     உரித்தெனவே,  அங்ஙனம் உரித்தன்றிப் புலனெறி
வழக்கம்  ஒழிந்த பாட்டிற்கும் வருதலும், புலனெறி வழக்கம் அல்லாத
பொருள்   இவ்விரண்டற்கும்   வாராமையுங்  கூறிற்று. இவை  தேவ
பாணிக்கு    வருதலுங்    கொச்சகக்   கலி  பொருள்வேறுபடுதலுஞ்
செய்யுளியலுள்       வரைந்து      ஓதுதும்.       ‘மக்கணுதலிய
அகனைந்திணையு’
மென (தொல்.   பொ.  அகத்.  54).  மேல்வரும்
அதிகாரத்தானும்,  இதனை  அகத்திணையியலுள்  வைத்தமையானும்.
அகனைந்திணை  யாகிய  காமப்பொருளே  புலனெறி வழக்கத்திற்குப்
பொருளாமென் றுணர்க.

‘பாடல்     சான்ற’  என்றதனாற் பாடலுள் அமைந்தனவெனவே,
பாடலுள்   அமையாதனவும்   உளவென்று   கொள்ளவைத்தமையிற்,
கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய
புலனெறி    வழக்காய்ச்    சிறுபான்மை    வருமென்று    கொள்க.
செய்யுளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:03:01(இந்திய நேரம்)