தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3312


லிய கூட்டுண்
டிகலி னிசைமேஎந் தோன்றிப்
பலவா கியநில நீபெறு நாளே’’

இது முடியுங் குடையும்  ஒழித்து அரசர்க்குரியன  கூறி  இழித்துக்
கூறியும் புகழ்மிகுத்தது.

‘‘பல்லிதழ் மென்மலர்’’ என்னும் (109) அகப்பாட்டினுள்‘‘அறனில்
வேந்த  னாளும்,  வறனுறு குன்றம் பலவிலங் கினவே’’ எனக் காட்டுத்
தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார்.

ஆர்  அமர் ஓட்டலும் - குறுநில  மன்னருங்  காட்டகத்து வாழும்
மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும்;

உ-ம்:

‘‘பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற
லோச்சினன் றுரந்த காலை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே’’
      (புறம்.308)

இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங்கண்டது.

‘‘கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றி
னாட்செருக் கனந்தார்த் துஞ்சு வோனே
யவனெம் மிறைவன் யாமவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும் நின்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
சென்றுவாய் சிவந்து மேல்வருக
சிறுகண் யானை வேந்துவிழு முறவே’’
        (புறம்.316)

இது மறவன் ஆரமரோட்டல் கூறியது.

இவை தன்னுறுதொழில் கூறியன.

இவை புறம்.

ஆரமரோட்ட  லென்பது  பொதுப்படக்   கூறவே,   வேந்தர்க்கு
உதவியாகச் செல்வோரையுங் கொள்க.

உ-ம்:

‘‘வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப்
புள்ளூன்றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)