Primary tabs

க்கையொடு
பெருந்திரு வற்றென
வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையோ டருங்கலந் தரா அர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
யறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே’’
(பதிற்றுப்.71)
என வரும்.
‘‘இருங்கண் யானையோ டருங்கலந் தெறுத்துப்
பணிந்துகுறை மொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே.’’
(பதிற்றுப்.)
இதுவும் அது.
இவை பதிற்றுப்பத்து.
தோற்றோர்
தேய்வும் - அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு
கூறுதலும்;
உ-ம்:
‘‘வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை
மாமலையிற் கணங்கொண்டவ
ரெடுத்தெறிந்த விறன்முரசங்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடிர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா
ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென
வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
வனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசை
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே’’
(பதிற்றுப்.80)
என வரும்.
இது பதிற்றுப்பத்து.
குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் - வேந்தனது குறையாத
வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை
விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டும்;
வள்ளை.
உரற்பாட்டு. கொற்றவள்ளை, தோற்ற
கொற்றவன்
கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர்.
உ-ம்:
‘‘வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து
ஊரறிய லாகா கி

