Primary tabs

மனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை யூருந் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே’’
(அகம்.255)
இது
தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது. இம் மணிமிடை
பவளத்துப் பின்பனி வந்தவாறும்
நண்பகல் கூறாமையும் அவர்
குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க.
‘‘குன்ற வெண்மண லேறி நின்றுநின்று
இன்னுங் காண்கம் வம்மோ தோழி
களிறுங் கந்தும் போல நளிகடற்
கூம்புங் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’’
வருகின்றாரெனக்
கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது.
இது
பின்பனி நின்ற காலம் வரைவின்றி வந்தது. கடலிடைக்
கலத்தைச்
செலுத்துதற்கு உரிய காற்றொடு பட்ட காலம் யாதானுங் கொள்க. ‘ஆகு’
மென்றதனான் வேதவணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத
காலத்தாயிற் செந்தீ
வழிபடுதற்கு உரியோரை நாட்டிக் கலத்திற்
பிரிதற்கு உரியரென்று கொள்க.
மேலனவற்றிற்குப் புறனடை
12.
நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே.
இஃது
உரிப்பொருள் மயங்கு
மென்றலின் மேலனவற்றிற்குப்
புறனடை.
(இ-ள்)
திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே ‘மாயோன் மேய’
(5) என்பதனுள் ஒரு நிலத்து ஓரொழுக்கம்
நிகழுமென நினைத்துக்
கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முள்
மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என
மொழிப - அங்ஙனம் ஒருநிலத்து இரண்டொழுக்கந் தம்முள்
மயங்குதலன்றி இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல்
இல்லை என்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர் -
அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி
வழக்கத்தினை. மெய் பெற உணர்ந்த அறிவினையுடையோர் எ-று.
என்றது,
ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள்
மயங்கி
வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு
தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே,
ஒரு நிலமே
மயங்குமாறாயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணை
மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள்
மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர்
உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே
காலம் மயங்குதலும்,
கருப்பொருள் மயக்குதலும் பெறுமென்றற்கு,