Primary tabs

ம் போல்வன
இருத்தல். அப் பருவம் வருவதற்கு முன்னர்க்
கூறுவன முல்லை சான்றகற்பு அன்மையிற் பாலையாம். இனிப்
பருவங்கண்டு தலைவி ஆற்றாது கூறுவனவும், தோழி பருவமன்
றென்று வற்புறுத்தினவும், வருவரென்று வற்புறுத்தினவும்,
தலைவன்
பாசறைக்கண் இருந்து உரைத்தனவும், அவைபோல்வனவும்
நிமித்தமாதலின் இருத்தனிமித்தமெனப்படும்.
இனிக் கடலுங்
கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும்,
தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்
துணைப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல்
முதலியனவும், தலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம்.
புலவி
முதலியன ஊடலாம். பரத்தை, பாணன் முதலியோர்
ஊடனிமித்தமாம்.
ஏணையவும்
வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறுபாண்மை
வருமேனும்,
பெரும்பான்மை இவை உரியவென்றற்குத்
‘திணைக்குரிப்பொருளே’யென்றார்.
உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை.
உ-ம்:
‘‘கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ
யைதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாயது முயங்கற்கு மினிதே’’
(குறுந்.62)
இக்குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது.
‘‘அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற்
றிருமணி புரையு மேனி மடவோ
ளியார்மகள் கொல்லிவ டந்தை வாழியர்
துயர முறீஇயின ளெம்மே யகல்வய
லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் றொண்டி
தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே’’
(நற்.8)
இந் நற்றிணையும், ‘‘முலையே முகிழ்முகிழ்த் தனவே’’ (337)
என்னுங் குறந்தொகையும் புணர்தனிமித்தம்.
‘‘அன்றவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி
வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாஅவுயர்