தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3768


னும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’’.
     (குறுந்.21)

இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றியிருந்தது.

‘‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னி
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே’’
        (குறுந்.221)

இது  பருவங்கண்டாற்றாது  கூறியது. இது முல்லைசான்ற கற்பா யிற்று,
அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.

‘‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.’’
         (குறுந்.66)

இது     பருவமன்றென்று வற்புறத்தலின் இருத்தனிமித்த மாயிற்று.
‘‘தேம்படு     சிமய’’    (94)    என்னுங்    களிற்றியானைநிரையும்
இருத்தனிமித்தமாம்,  இக்காலம்  வருந்துணையும்  ஆற்றினா ளெனத்
தான் வருந்துதலின்.

‘‘கானலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா
தொருநின் னல்லது பிறிதியாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறைவ கிளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல்காற்
கைதையம் படுசினை யெவ்வமோ டசாஅங்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின்னுறு விழுமங் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே.’’
      (அகம்.170)

இவ் அகப்பாட்டு நெய்தல். இரங்கலுரிப்பொருட்டாயிற்று.

‘‘ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
விரைகொண் டவையும் விரை

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:35:04(இந்திய நேரம்)