Primary tabs

எனவும்
வருவனவும்
பிறவுங் கொள்க. வேட்டு என்னுந் தொழிலுடையானை
வேட்டுவனென்றலிங் குறிப்பு வினைப்பெயர்.
‘‘குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
வளையண் முளைவா ளெயிற்ற
ளிளைய ளாயினு மாரணங் கினளே.’’
(ஐங்குறு.256)
இது வருத்தும்
பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது.
இப்பத்தினுட் ‘‘குறவன் மகள்’’ எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள;
அவையுங் கொள்க. இவ்வாற்றான்
இந்நிலத்து மக்கள் பெயரும்
பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்தன வுளவேற் கொள்க.
(21)
ஏனைய திணைதொறுமரீஇய பெயரினருள்ளும்
தலைமக்களாய் வழங்குவாரும் உண்மை
ஆனா வகைய திணைநிலைப் பெயரே.
இது
முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணைதொறு மரீஇய
பெயருடையோரினுந் திணைநிலைப் பெயராகிய தலைமக்களாய்
வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்)
ஏனோர் பாங்கினுந் திணைநிலைப்பெயர் எண்ணுங் காலை
- ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள்
கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங்காலத்து; ஆனா
வகைய - அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டினை யுடைய எ-று.
உ-ம்:
‘‘சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவி லெயினர் தங்கைநின் முலைய
கணங்கென நினைதி நீயே
யணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே’’
(ஐங்குறு. 363)
இவ் வைங்குறுநூறு உடன்போகின்றான் நலம்பாராட்டிய கூற்றாம்.
‘‘முளவுமா வல்சி யெயினர் தங்கை
யிளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச்
சொல்லினே னிரக்கு மளவை
வென்வேல் விடலை விரையா தீமே.’’
(ஐங்குறு.364)
இவ் வைங்குறுநூறு கொண்டுடன்போம் காலத்திற்குக்
கொண்டுடன்போக் கொ