Primary tabs

கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்.
இது மேல் நால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப்
பெறுவரென்றார்; அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப, கைக்கிளை
பெருந்திணைக்க ணென்கின்றது.
(இ-ள்)
அடியோர் பாங்கினும். பிறர்க்குக் குற்றேவல்
செய்வோரிடத்தும்; வினை வலர் பாங்கினும். பிறர் ஏவிய தொழிலைச்
செய்தல் வல்லோரிடத்தும்; கடி வரையில் புறத்து என்மனார் புலவர்.
தலைமிக்க புறத்து
நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் எ-று.
கூன்பாட்டினுள்,
‘‘நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
முசாவுவங் கோனடி தொட்டேன்.’’
எனவும்,
‘‘பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல்.’’
(கலி.94)
எனவும் பெருந்திணைக்கண்
அடியோர் தலைவராக வந்தது.
என்னை? கோன் அடிதொட்டேன் என்றமையானும் கோயில்
என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்கள் என்பது ஆயிற்று.
‘ஏஎயிஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக்கலியுள்
‘‘போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்.’’
(கலி.62)
தீயகாமம்
இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக
வந்த கைக்கிளை. அடியோரெனவே இருபாற்றலை மக்களும்
அடங்கிற்று. ‘கடிவரையில’ என்றதனான்
அவருட் பரத்தையரும்
உளரென்று கொள்க.
‘‘இகல்வேந்தன்’’ என்னும் முல்லைக்கலியுள்,
‘‘மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ
ராயனை யல்லை பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்.’’
(கலி.108)
என்பதனாற் றலைவன் வினைவல பாங்கனாயினவாறு காண்க.
இதனுள்,
‘‘புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ