தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3788


ன்பது     பெற்றாம்.  ‘‘சிறந்தது  பயிற்ற  லிறந்ததன்  பயனே’’ (192)
என்பதனாற்    கிழவனும்    கிழத்தியும்    இல்லறத்திற்    சிறந்தது
பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின்,

இல்லறம்     நிரம்பாதென்றற்கு   ‘நிரம்பா   வாழ்க்கை’  யென்றார்.
இல்லறம்  நிகழ்கின்ற  காலத்தே மேல்வருந் துறவறம் நிகழ்த்துதற்காக
அவற்றைக்   கூறும்   நூல்களையும்   கற்று   அவற்றின்  பின்னர்த்
தத்துவங்களையுமுணர்ந்து    மெய்யுணர்தல்    அந்தணர்   முதலய
மூவர்க்கும்  வேண்டுதலின்  ஓதற்பிரிவு  அந்தணர்  முதலியோர்க்கே
சிறந்ததென்றார்.

‘‘பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ.’’
   (கலி.15)

என்பதும்     அது;   மையற்ற   படிவம்   அந்தணர்  முதலியோர்
கண்ணதாகலின்.  ‘‘விருந்தின்மன்னர்’’  (54)  என்னும்  அகப்பாட்டில்
வேந்தன்  பகைமையைத்  தான்  தணிவித்தமை  கூறலின் அந்தணன்
தூதிற்  பிரிந்தமை பெற்றாம். ‘‘வயலைக் கொடியின் வாடிய மருங்குல்’
(புறம்.305)  என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறுணர்க.
அரசன்   தூதுசேறல்   பாரதத்து  வாசுதேவன்  தூது சென்றவாற்றா
னணர்க.

அது.

‘‘படர்ந்தாரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே.’’

                                 (சிலப்.ஆய்ச்சி.)

என்பதனானுணர்க. வணிக சென்ற தூது வந்துழிக் காண்க.       (26)

பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தெனல்
 

27.
தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.
 

இது பகைவயிற் பிரிவு. அரசர்க்கே உரித்தென்கின்றது

(இ-ள்.)     தானே சேறலும் - தன்பகைக்குந் தானே செல்லுதலும்;
தன்னொடு  சிவணிய  ஏனோர் சேறலும் - அவனொடு நட்புக்கொண்ட
ஒழிந்தோர்  அவற்குத்  துணையாகிச்  செல்லுதலுமாகிய  இருபகுதியும்;
வேந்தன் மேற்று. அரசன்கண்ண எ-று.

எனவே,     வணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை
கூறிய  அதனானே  முடியுடைவேந்தர்  தாமே சேறலும் ஏனோரெனப்
பன்மைகூறிய    அதனானே    பெரும்பான்மையுங்   குறுநிலமன்னர்
அவர்க்காகச் சேறலும், முடியுடை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:38:54(இந்திய நேரம்)