தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3801


ஆறே’’                                (அகம்.15)

‘‘அருஞ்சுரம் இறந்தவென் பெருந்தோட்குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை நாற்றி
உவந்தினி தயரு மென்ப யானு
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
யீன்ற நட்பிற் கருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட்
கூந்தல் வாரிநுசுப்பிவர்ந் தோம்பிய
நலம்புனை யுதவியோ உடையேன் மன்னே
அஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமிச்
சிறுபை நாற்றிய பஃறலைக் கருங்கோல்
ஆகுவ தறியும் முதுவாய் வேல
கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம்
மாறாது வருபனி கலுழுங் கங்குலின்
ஆனாது துயருமென் கண்ணினிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே’’  
(அகம்.195)

இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது.  

‘‘இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன
சொல்வன் மாக்களிற் செல்லு மஃகின
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சிப்
பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமியள்
ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு
பேதை போயினள் பிறங்குமலை யிறந்தென
மான்ற மாலை மனையோர் புலம்ப
ஈன்ற தாயு மிடும்பைய ளெனநினைந்து
அங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந்
திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற்
கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய
குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய்
தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை
ஒண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித்
தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி
யியங்குநடை யிளமை யின்புற் றீந்த
மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத்
துளங்கிரு ளிரவினு மன்ற
விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே’’
                                
(தகடூர்யாத்திரை) 

இது தெய்வத்தை நோக்கிக் கூறியது.  

‘‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்தினை வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேல் விடலையோ
டஞ்சி லோதியை வரக்கரை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:41:23(இந்திய நேரம்)