தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3807


நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்
ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
நிறையிதழ் உண்கண் மகளிர்க்கு
அரிய வாலென அழுங்கிய செலவே’’
       (அகம்.65)

இதனுள் அன்னைசொல்லும்  பெண்டிர் கௌவையுந் தலை வரும்
விழுமமென்று தலைவிக்குக் கூறினாள்.

இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள.

‘‘இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் கவின் பெறப்
பொலந்தேர்க் கொண்கனும் வந்தன னினியே
யிலங்கரி நெடுங்கண் அனந்தல் தீர்மதி
நலங்கவர் பசலையை நகுகம் யாமே’’
      (ஐங்குறு.200)

இவ்   வைங்குறுநூற்றின்கண்   அனந்தறீர்  என்றதனானே உடன்
கொண்டு போதற்கு வந்தானெனப் பாயலுணர்த்திக் கூறிற்று.

‘‘வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர்
தாருந் தையின தழையும் தொடுத்தன
நிலநீ ரற்ற வெம்மை நீங்கப்
பெயனீர் தலைஇ உலவையிலை நீத்துக்
குறுமுறி யீன்றன மரனே நறுமலர்
வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன்
தேம்படப் பொதுளின பொழிலே கானமும்
நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட்
பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப்
போது வந்தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை யாகி யென்சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி
தெற்றி யுலறினும் வயலை வாடினும்
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனிநின் னயந்த
அன்னை யல்லல் தாங்கிநின் னையர்
புலிமருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே’’
   (அகம்.259)
  

இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது.

‘‘அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கே ழூர
வின்கடுங் கள்ளி னிழையணி கொடித்தேர்க்
கெற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒர் கிழ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:42:34(இந்திய நேரம்)