தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4898


தெண்கழி   மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட  புள்ளெல்லாங் குடம்பை
நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று
கஞற்றவும்,   நெடுந்திரை  யழுவத்து  நிலாக்கதிர்  பரப்பவுங்,  காதல்
கைமிக்குக்  கடற்கானுங்  கானற்கானும் நிறைகடந்து  வேட்கைபுலப்பட
உரைத்தலின்,  ஆண்டுக்  காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள்
சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்தது.

உ-ம்:

‘‘நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் கொக்கின நிரைபறை யுகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழில் மழைக்கண் கலுழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலஞ் சிதைய ஏங்கி யானாது
அழல்தொடங் கினளே பெரும அதனால்
கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்
சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே’’   (அகம்.120)

பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது.
நெய்தற்கு எற்பாடு வந்தது.

‘கானன்  மாலைக்  கழிப்பூக்  கூம்ப’ (அகம்.40) என்பதனுன்
மாலையும் வந்தது. கலியுள் மாலைக்காலம் (நெய்தலின்கண் வந்தவாறு
காண்க.  இதுமேல் ‘நிலனொருங்கு மயங்குத லின்று’ (12) என்பதனாற்
பெறுதும்.

இவற்றிற்கு     அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக் காரும்
இளவேனிலும்  வேனிலும்  பெரும்பொழுதாகக்  கொள்ப  என்றற்குப்
பொருள்  பெறத் தோன்றும்’ என்றார். இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று
காலமும்  பற்றிவரச்  சான்றோர்  செய்யுட்  செய்திலர், அக்காலத்துத்
தலைவி புறம் போந்து வி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:11:23(இந்திய நேரம்)