தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4902


போ தலர்ந்து
தாதுந் தளிரு மேதகத் துவன்றிப்
பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு
செவ்விதிற் றென்றல் நொவ்விதிற் றாகிக்
குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும்
நிலவுஞ் சாந்தும் பயில்வுறு முத்தும்
இன்பம் விளைக்கு நன்பொருள் பிறவும்
பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும்

இளவேனிற்     காலத்துப்,  பொழில்   விளையாடியும்,  புதுப்பூக்
கொய்தும், அருவியாடியும் முன்னர்  விளையாட்டு நிகழ்ந்தமை பற்றிப்
பிரிந்த   கிழத்தி  மெலிந்துரைக்குங்  கிளவி  பயின்று  வருதலானும்,
உடன்போக்கின்கண்     அக்காலம்    இன்பம்    பயக்குமாதலானும்
இளவேனிலொடு  நண்பகல்  சிறந்த  தெனப்பட்டது.  பிரிந்த  கிழத்தி
இருந்து கூறுவன கார்கால மன்மையின் முல்லையாகா.

உ-ம்:

‘‘கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத்
திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்
பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும்
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த
நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ
டகவுநர்ப் புரந்த வன்பின் கழல்தொடி
நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந்
தாழ லென்றி தோழி யாழவென்
கண்பனி நிறுத்த லெளிதோ குரவுமலர்ந்
தற்சிர நீங்கிய வரும்பத வேனி
லறலவிர் வார்மண லகல்யாற் றடைகரைத்
துறையணி மருதோ டிகல்கொள வோங்கிக்
கலுழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்
திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ் சூர
நுகர்குயில் அகவுங் குரல்கேட் போர்க்கே’’   (அகம்.97)

இது வற்புறத்துந் தோ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:12:09(இந்திய நேரம்)