Primary tabs

மடலேறவேன்போலு மென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச்
சொல்லுதலே தனக்கின்பமாதலிற் ‘சொல்லி யின்புற’லென்றார். இது
புல்லித் தோன்றும் கைக்கிளையெனவே காமஞ் சான்ற
இளமையோள்கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று.
அஃது ‘‘எல்லாவிஃதொத்தன்’’ (61) என்னுங் குறிஞ்சிக் கலியுள்,
‘‘இவடந்தை,
காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாதுநீ வேண்டியது;
பேதாஅய்,
பொருள் வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ
மருளி மடநோக்கி னின்றோழி யென்னை
யருளீயல் வேண்டுவல் யான்’’
(கலி.61)
எனவரும்.
இது
கைகோளிரண்டினுங் கூறத்தகாத
வாய்பாட்டாற் கூறலிற்
கைக்கிளையென்றார்.
குறிப்பென்றதனாற்
சொல்லியின்புறினுந்
தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகா
தென்பதூஉம், அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க் காயின் அது
புலனாமென்பதுஉங்
கொள்க. அது ‘‘கிழவோள் பிறள்குணம்’’
(தொல். பொ. பொரு. 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுப.
‘காமஞ்
சாலா இளமையோள்வயி’னெனப்
பொதுப்படக் கூறிய
அதனான் வினைவல பாங்காயினார்கண்ணும் இவ்விதி கொள்க.
இதனைக் ‘‘காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து’’
என்னும் (109) முல்லைக்கலியான் உணர்க.
(50)
பெருந்திணையிலக்கணம்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.
இது முறையானே
இறுதிநின்ற பெருந்திணை யிலக்கணங்
கூறுகின்றது.
(இ-ள்.)
ஏறிய மடற்றிறம் - மடன்மா கூறுதலன்றி மடலேறுதலும்;
இளமை
தீர் திறம் - தலைவற்கு
இளையளாகாது ஒத்த
பருவத்தாளாதலும்;
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் - இருபத்து
நான்காம்
மெய்ப்பாட்டின் நிகழ்ந்து ஏழாம்