Primary tabs

இவை
சான்றோர் செய்யுளுட்
பெருவரவிற்றன்மையினன்றே
முற்சூத்திரத்து
முன்னும் பின்னும் இவற்றை வைத்த தென்பது.
‘‘முட்காற் காரை முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட் டார
நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
யாதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.’’
(புறம்.258)
இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது.
‘‘முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப
மலர்தலை யுலக மோம்பு மென்ப
பாசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின்
வெட்சித் தாயத்து வில்லே ருழவர்
பொருந்தா
வடுகர் முனைச்சுரங்
கடந்து கொண்ட பல்லா னிரையே.’’
இது வேந்துவிடு
தொழிற்கண் வேந்தனைப் பெயர்
கூறிற்று.
ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க.
(54)
இயற்பெயர்
புறத்திணையொடு பொருந்தி அகத்திணைக்கண்ணும்
வருதல்
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.
இது
புறத்திணக்குத் தலைவர்
ஒருவராதலும், பலராதலும்
உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின், எய்தாத
தெய்துவித்து எய்தியது
விலக்கிற்று.
(இ-ள்.)
அகத்திணை மருங்கிற்
பொருந்தின் - ஒருவனையும்
ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக்கண்ணே
வந்து பொருந்துமாயின்; புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது
இல -ஆண்டும் புறத்திணை கலத்தலிடத்தின் அல்லது வருதலில்லை
எ-று.
எனவே,
புறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவம மாயும்
அகத்திணையுட் கலக்குமென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று.
அளவுமெனவே ஒரு செய்யுட்கண்ணும் அப் புறத்திணையாகிய
இயற்பெயர்களுஞ் சிறப்புப்பெயர்களும் ஒன்றேயன்றிப் பலவும்
வருதலுங் கொள்க.