Primary tabs

பகர்ந்தோய் - நெடிது
மனக்குரிய காதல் வயவேந்த னென்று
நினக்குரிய வாக நிரை.’’
இவை கண்டோர் கூற்று.
வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை - நிரைகோடற்கு
எழுந்தோர் வேயுரைத் தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புகள்
முடிந்தபின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப்
பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று
விரைவொழிந்து இருக்கின்ற
இருக்கையும்;
உ-ம்:
‘‘கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்
பரந்துசென் மள்ளர் பதிந்தா - ரரந்தை
விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி
யெரிந்தவியும் போலுமிவ் வூர்.’’
இது கண்டோர் கூற்று.
‘‘இருநில மருங்கி னெப்பிறப் பாயினு
மருவின் மாலையோ வினிதே யிரவி
னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து
நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங்
கன்றுகுரல் கேட்டன போல
நின்றுசெவி யோர்த்தனசென்றுபடு நிரையே.’’
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு.1251.நிரைமீட்சி)
இது மறவர் கூற்று.
முற்றிய
ஊர்கொலை. நிரைகோடற்கு
எழுந்தோர் அவர்
புறஞ்சேரியை
வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரைகாவலரைக்
கொன்று
பகையறுத்தலும்,
நிரைமீட்டற்கு
எழுந்தோர்
அவ்வூரைவிட்டுச்
சிற்றூரைக் காத்துக் கோடலும்;
உ-ம்:
‘‘அரவூர் மதியிற் கரிதூர வீம
விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற
பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர்
கொல்வார்ப் பெறாஅர் கொதித்து.’’
‘‘சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு
நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண்
டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத்
துகளெழுங்கொல் பல்லான் றொழு.’’
இவை கண்டோர் கூற்று.
ஆகோள்- நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக
நிரையகப்படுத்தி மீட்டலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது
நிரையை