தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5011


இடைப்புலத்துச்     சொல்லுவனவுங்,    கண்டுழி    யிரங்குவனவுங்,
கையறுநிலையும்,  பாணர் கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர்
தமக்குரைப்பனவும்,  போல்வன கற்காண்டலின் பகுதியாய் அடங்கும்.
கால்கொள்ளுங்   காலத்து,   மாலையும்  மலரும்  மதுவுஞ்  சாந்தும்
முதலியன  கொடுத்தலும்,  அனையோற்கு இனைய கல்தகுமென்றலுந்,
தமர்பரிந்திரங்கலும்  முதலியன  கால்கோளின்  பகுதியாய் அடங்கும்.
நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும், ஏற்றிய சகடத்தினின்று
இழிந்தவழி   ஆர்த்தலும்,   அவர்   தாயங்   கூறலும்,   முதலியன
நீர்ப்படையாய்  அடங்கும்.  நடுதற்கண்,  மடையும்  மலரும் மதுவும்
முதலியன கொடுத்து பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம்
இயம்ப   விழவுச்  செய்யுஞ்  சிறப்பெல்லாம்  நடுதலாய்  அடங்கும்.
பெயரும்  பீடும்  எழுதுங்காலும்  இப்பகுதிகள் கொள்க. நாட்டப்படுங்
கல்லிற்குக்   கோயிலும்   மதிலும்   வாயிலும்  ஏனைச்சிறப்புக்களும்
படைத்தல்  பெரும்  படைப்பகுதியாய் அடங்கும். வாழ்த்தற்கண்ணும்
இதுதான் நெடிது வாழ்கவெனவும், இதன்கண்ணே அவனின்று நிலாவுக
வெனவும்,  பிறவும்  கூறுவனவு  மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்.
ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க.

இனிப்  ‘‘பரலுடை   மருங்கிற்   பதுக்கை’’   என்னும்   (264)
புறப்பாட்டினுள்,   ‘‘அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித், தினி
நட்டனரே    கல்லும்’’
 எனக்   கன்னாட்டுதல்   பெரும்படைக்குப்
பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப்  பெயர்
பொறித்து  நாட்டுதல்  காட்டுநாட்டோர்  முறைமை யென்பது ‘சீர்த்தகு
சிறப்பின்’   என்பதனாற்   கொள்க.   ‘‘பெயரும்   பீடு   மெழுதி
யதர்தொறும்  -  பீலி  சூட்டிய   பிறங்கு  நிலை நடுகல்’’
என
அகத்திற்கும் (அக்ம.131) வருதலிற்   பொதுவியலாயிற்று;  இவை  ஒரு
செய்யுட்கண்  ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின்கண் வருதலுஞ்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:33:20(இந்திய நேரம்)