Primary tabs

மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென
எட்டு வகைத்து எ-று.
அது மேற்கூறுப. (11)
அவை
எட்டுத்துறையுமாவன
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமு மன்றி முரணிய
புறத்தோ ணணங்கிய பக்கமுந் திறப்பட
வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர்
வருபகை பேணா ராரெயி லுளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.
இது
முற்கூறிய நாலிரு துறைக்கும்
பெயரும் முறையுந்
தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்.)
கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் - பகைவர்
நாட்டினைத் தான்
கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல
வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்
தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும்
கொள்ளாரென்ப.
உ-ம்; ‘
வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற
படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா
ருடையன தாம்பெற்று வந்து.’’
(பெரும் பொருள் விளக்கம்
புறத்திரட்டு.1272.பாசறை 5)
என வரும்.
‘‘கழிந்தது பொழிந்தென’’ என்னும் (203) புறப்பாட்டினுள், ‘‘ஒன்னார் ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்’’
என்பதும் அது.
‘‘ஆனா
வீகை யடுபோர்’’ என்னும் (42)
புறப்பாட்டும் அது.
இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும்
அது.
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - அவ்வாறு குறித்த ‘‘மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந்
குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன்
படைத்தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது
செல்வோரும் எடுத்துரைத்தலும்;உ-ம்
தெழுவாளா னேற்றுண்ட தெல்லா - மிழுமென
மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெரிய விட்ட மிகை.’’
என வரும்.