Primary tabs

முலக மொன்றே யாதலின்
ஒன்றுபடு மனத்தொடு கொன்று கொன்றுவப்பச்
செஞ்சோற்று விலையுந் தீர்ந்துதம் மனைவியர்
தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும்
புதுவது வந்த மகளிர்க்கு
வதுவை சூட்டிய வான்படர்ந் தோரே.’’
(புறத்திரட்டு.1355.அமர்.10)
எனவும்,
‘‘சென்ற வுயிர்போலத் தோன்றா துடல்சிதைந்தோ
னின்ற வடிபெயரா நின்றவை - மன்ற
லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த
மரவடியே போன்றன வந்து’’
எனவும் வரும்.
‘‘வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக்
கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப் படைதழீஇக் கூற்றுவினை யாடவர்
தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத்
திறையும் பெயருந் தோற்றி னுமரு
ணாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப்
போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிறைதார் மார்பினின் கேள்வனைப்பிறரே.’’
(புறம்.294)
‘‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.’’
(குறள். படைச்.4)
‘‘நறுவிரை துறந்த நரைவெண் கூந்த
லிரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பாற் சில்லுறை போலப்
படைக்குநோ யெல்லாந் தானா யினனே.’’
(புறம்.276)
‘‘தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்
கொற்கத் துதவினா னாகுமால் பிற்பிற்
பலர்புகழ் செல்வந் தருமால் பலர்தொழ
வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர்
மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகு முயிர்க்கு.’’
(தகடூர் யாத்திரை புறத்திரட்டு.1315.படைச்.9)
என வரும்.
‘‘கோட்டாங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலு
மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய
திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன்
வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி
யோம்புமி னோம்புமி னிவணென வோம்பாது
தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே.’’
(புறம்.275)
இஃது உதவியது.
இனி யானைநிலைக்குங்
குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய்
வருவனவுங் கொள்க. அஃது
அரசர்மேலும் படைத்தலைவர் மேலும்
ஏனையோர் மேலும் யானை
சேறலுங், களிற்றின்மேலுந் தேரின்
மேலுங் குதிரைசேறலுந், தன்மேலிருந்து பட்டோருடலை மோந்து
நிற்றலும் பிறவுமாம்.
உ-ம்:
‘‘மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்
காயத்தூ
றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந்
தொலைவறியா வாடவருந்
தோன்றினார் வான்மேன்
மலையுறையுந் தெய்வம்போல் வந்து.’’
(பெரும்பொருள்விளக்கம் புறத்திரட்டு.1401.யானை
மறம்.14)
‘‘கையது கையோ டொருதுணி கோட்டது
மொய்யிலைவேன்
மன்னர் முடித்தலை - பைய
வுயர்பொய்கை நீராட்டிச்
செல்லுமே யெங்கோன்
வயவெம்போர் மாறன் களிறு.’’
இவை யானைநிலை.
‘‘பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன்