Primary tabs

றேரே ராக
விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு செஞ்சாற்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்
கான நரியொடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க் கிருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்திற் போர்வை
யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப்
பாடி வந்திசிற் பெரும பாடான்
றெழிலி தோயு மிமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன
வோடை நுதல வொல்குத லறியாத்
துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா வீகைத் தகைவெய் யோயே’’
(புறம்.369)
என வரும்.
‘‘நளிகட
லிருங்குட்டத்து’’ என்னும் (26)
புறப்பாட்டுப் பலி
கொடுத்தது.
களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது.
‘‘ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா
யாவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து’’
(களவழி நாற்பது.36)
என வரும்.
தேரோர் வென்ற
கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின்கண்
வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பானே
தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடுங்
குரவையானும்;
உ-ம்:
‘‘சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க
வாடிய கூத்தரின் வேந் தாடினான் வீடிக்
குறையாடல் கண்டு வந்து கொற்றப்போர் வாய்த்த
விறையாட வாடாதார் யார்’’
‘‘விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட்
கோடியர் முழவின் முன்ன ராடல்
வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்
திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன்
மடம்பெரு மையி னுடன் றுமேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே’’
(பதிற்றுப்.56)
என வரும்.
ஒன்றிய மரபிற்
பின்தேர்க் குரவையும் - தேரோரை வென்ற
கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே, தேரின் பின்னே கூழுண்ட
கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும்
குரவையானும்;
உ-ம்:
‘‘வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப
வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
கொண்டா