தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5088


‘‘செயிர்தீர்  கற்பிற் சேயிழை கணவ’’  (புறம்.3)  என்றாற்போலச்
சிறுபான்மை  ஆண்மக்களொடு படுத்துப் பாடுப. ‘வகை’யென்றதனான்
வாழ்த்தின்கண்  மக்கட்பொருளும்  உடன்தழுவினும்  அவை கடவுள்
வாழ்த்தாமென்று கொள்க.

உ-ம்:

‘‘எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றா
ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள்
காடமர்ந் தாடிய ஆடல னீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரல னிரண்டுருவாய்
ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரு
மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே’’      (பதிற்றப்பத்து)

இது கடவுள் வாழ்த்து.

தொகைகளிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள  கடவுள்  வாழ்த்தெல்லாம்
இதன்கண் அடக்குக.

இனி அறுமுறை வாழ்த்து வருமாறு:

‘‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
’’               (குறள்.28)

‘‘கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை’’ 
            (குறள்.15)

‘‘நாகின நந்தி யினம்பொலியும்போத்தென
வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப ஆயர்
அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த
வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர்
மெல்லக் கடைவிடத்து நெய்தோன்ற நெய்பயந்து
நல்லமு தன்ன வளையாகு நல்ல
புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி
யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற்
காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி
யாவா ழியரோ நெடிது’’

ஏனைய வந்துழிக் காண்க.

‘‘புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து
வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங்
கரிமான் பீடத் தரசுதொழ விருந்து
பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம்
புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந்
துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி
முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ
லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன்
பிறந்தது
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:48:19(இந்திய நேரம்)