தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5092


ய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

(இ-ள்.) காமப்பகுதி - முன்னர்ப் ‘புரைதீர் காம’ (தொல்.புறம். 26)
மென்றதனுட்   பக்குநின்ற  புணர்ச்சி  வேட்கை;  கடவுள்  பாங்கினும்
வரையார் -  கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும்
வரையார்   என்மனார்  புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர்
புலவர் எ-று.

பகுதி    ஆகுபெயர்.   அது  கடவுண்மாட்டுக்  கடவுட்பெண்டிர்
நயப்பனவும்,  அவர்மாட்டு  மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண்
மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.

இன்னும்   ‘பகுதி’  யென்றதனானே  எழுதிணைக்குரிய  காமமுங்
‘காமஞ்சாலா இளமையோள்வயிற்’ (தொல். அகம். 50) காமமுமன்றி
இது வேறொரு காமமென்று கொள்க.

உ-ம்:

‘‘நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே
லொல்கெனி னுச்சியா ணோமென்னு - மல்கிரு
ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை
யூடலுணர்த்துவதோ ராறு’’ 
       (புற. வெ. பாடாண்.48)

‘‘பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால்
வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங்
கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ’’

‘‘குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே
யிடுமுத்தம் பூத னிருப்பப்- படுமுத்தம்
புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க்
கென்ன முறைய ளிவள்’’

என வரும்.

‘‘களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான் - றெளியாதே
செங்காந்தண் மெல்லிரலாற் சேக்கை தடவந்தே
னென்காண்பே னென்னலால் யான்’’ 
     (முத்தொள்.63)

‘‘அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயே யெம்பெருமா னென்று - கணியார்வாய்க்
கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமானார்
தோணலஞ் சேர்தற் பொருட்டு’’

என வரும்.

‘‘அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்
தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
யடுதோண்முயங்க லவைநா ணுவலே
யென்போற் பெருவிதுப் புறுக வென்று
மொருபாற் படாஅ தாகி
யிருபாற் பட்டவிம் மைய லூரே’’             (புறம்.83)

இது பெருங்கோழி நாய்கன் மகள்  ஒருத்தி ஒத்த அன்பினாற் காம
முறாதவழியுங் குண
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:49:08(இந்திய நேரம்)