Primary tabs

இன்னுஞ்
சான்றோர் செய்யுட்கண் இங்ஙனம் வருவன வெல்லாம்
இதனான் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர்
தமக்கும் பாடாண்தலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி
அகத்திணைச்
செய்யுள் செய்தாரேனும் ‘தம்மிசை பரந்துலகேத்த
வேதினாட்டுறைபவர்’
(கலி.26) என்று இவை பாடாண்டிணையெனப்
பெயர்பெறா என்றற்கு இது கூறினார். (32)
பிறப்பில்லாத் தெய்வங்களும் பாடாண்டிணைக்குரியவாதல்
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.
இது
தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதி
யிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒருவழிப் பிறக்கும்
பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய என்கிறது.
(இ-ள்.) கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத்
தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி - ஒரு பற்றுக்கோடின்றி
அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி-
தண்கதிர் மண்டிலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் -
என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட
மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே -
முற்கூறிய அமரரோடே கருதுமாற்றான் தோன்றும் எ-று.
‘‘பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை
மையறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு
மின்னா விடும்பைசெய் தாள்’’
(கலி.141)
என்றவழிக்
கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டில மென்றாற்
போலக் ‘கொடிநிலை’ யென்பதூஉம் அப்பொருடந்ததோர் ஆகுபெயர்.
இனி எப்புறமும்
நீடுசென்று எறித்தலின் அந்நீடனிலைமை பற்றிக்
கொடிநிலை யென்பாருமுளர்.
‘‘குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே’’ (குறுந்.132)
தொ. பொ. நச். (1) 14
என்றாற்போல, வள்ளியென்பதுவுங்
கொடியை; என்னை? பன்மீன்
தொடுத்த உடுத்தொடை கொடியெனப்படுதலின், அத் தொடையினை
இடை