Primary tabs


மை அவ்வேந்தற்கும்
உரித்து, ‘வெளிப் படை
தானே’
(தொல்.பொ.141) என்பதனுள் இப்பிரிவில்லை என்பராதலின். அது,
“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதழ்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.”
(கலி.31)
இதனுட் பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான்
வாளாணெதிரும்
வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு. இஃது
அவன்வயிற் பரத்தைமை கருதாதது.
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் - தலைவிக்கு இன்றி
யமையாத நாணுத்தான்
அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந்
நாணினைக்
கைவிடுத்தற் கண்ணும்; அஃது உடன்போக்கினும் வரைவு
கடாவும் வழியும் வேட்கைமீ தூர்ந்து நாண்துறந்துரைத்தல் போல்வன.
“அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே.”
(குறுந்.149)
இஃது உடன் போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது.
வரைதல் வேண்டித் தோழி செப்பியபுரைதீர் கிளவி புல்லிய எதிரும்
- வரைதல் விருப்பினான் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய
புரைதீர் கிளவியைத் தலைவி
பொருந்திநின்றே இயற்பழித்தற்கு
மறுத்தாள்போல் நிற்கும் எதிர் மறையையும்:
புரைதீர் கிளவி தலைவனுயர்பிற்கு ஏலாது
இயற்பழித்து உரைக்குங்
கிளவி. அது, “பாடுகம் வாவாழி தோழி” என்னுங் குறிஞ்சிக் கலியுள்,
“இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானின் இலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை”
(கலி.41)
எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ அதனை
உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படா தாள்,
“பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ
அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ
குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின்
திங்களுட் டீத்தோன்றி யற்று”
(கலி.41)
எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க.
“அருவி வேங்கைப் பெருவரை நாடற்
கியானெவன் செய்கோ வென்றி யானது
நகையென வுணரே னாயின்
என்னா குவைகொல் நன்னுத னீயே.”
(குறுந்.96)
இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
வரைவு உடன்படுதலும் - தலைவற்குத் தலைவிதமர் வரை
வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும்:
உ-ம்:
“இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும்
மலையக நாடனும் வந்தான்மற் றன்னை
அலையு மலைபோயிற் றின்று.”
(ஐந்திணை.எழு.3)
“ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னவெங்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.”
(குறுந்.34)
தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென
ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து
இருப்பார்
உறக்கம் காரணமாக எழுந்த கௌவை கேளாது வரைந்
தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்.
ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ அவன்
வரைவு
வேண்டினவிடத்து அவ்வரைவு புறத்ததாகியவழித் தலைவி
தன்னுயர்பு
உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறியவற்றைத்
தொகுத்து.
‘அதன்புறம்’ எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று.
தலைவி
தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை
மறுத்துத்
தலைவன் வரையுமாறு நீ கூறெனத்
தோழிக்குக்
கூறுமென்றற்குப், ‘புரைபட வந்த மறுத்தல்’ என்றார்.
“வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த
வோரிப் புதல்வ னழுதன னென்பவோ
புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால்
வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா
வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ
தோழி யவனுழைச் சென்று;
சென்றியா னறிவேன் கூறுக மற்றினி;
சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா
நினக்கொரூஉ மற்றென் றகலகலு