தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5284


 

டியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத்
தொடி செறி யாப்பமை”                      (கலி.54)

என்னுங் குறிஞ்சிக்கலியுள் “அதனா லல்லல் களைந்தனென் றோழி”
எனக்   கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக்  ‘களைந்தனெ’  னெனத்
தலைவியுரையெனத் தோழிக்கு  உரைத்தற்கட்   கூறியவாறு   காண்க.
இவ்வுதாரணம் ஆண்டுக் காட்டுதும்.

“உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த”       (அகம்.230)

என்னும் பாட்டுத் தலைவன் இதனைக் கூறியது.

நணு மிக வரினும் -  தலைவனை   எதிர்ப்பட்ட   தலைவி   தன்
பெருநாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக்கொள்ளாது நிற்பினும்:

உ-ம்:

“விளையா டாயமொடு வெண்மண லழுவத்து
மறந்தனந் துறந்த காழ்முளை யகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்து
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமா ருளவே.”              (நற்.172)

இதனுள்  ‘அம்ம  நாணுதும்’  எனப்  புதிதுவந்ததொரு நாணுமிகுதி
தோன்ற மறுத்துரைத்தலின், தன்வயினுரிமையும்  அவன்வயிற்  பரத்தை
மையுங் கூறினாள்.

இட்டுப்   பிரிவு   இரங்கினும்   -   சேணிடையின்றி  இட்டிதாகப்
பிரிந்துழித் தலைவி இரங்கினும்:

கற்பினுட்  சொல்லாது  பிரிதலையும்  இட்டுப்  பிரிவென்ப,  களவு
போல நிகழ்பொருள் உணர்த்திப் பிரிதலருமையின்.

உ-ம்:

“யானை யீண்டை யேனேயென் னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன்றம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே.”               (குறுந்.97)

‘தம்மூரான்’  என்றலின்  ஓதல்  முதலிய  பிரிவின்றி  அணித்தாய
வழிப் பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு காண்க.

“சிறுவெண் காக்கைச் செவ்வய்ப் பைந்தோடு
எறிதிரைத் திவலை யீர்ம்புற
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:26:15(இந்திய நேரம்)